×

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

விருதுநகர், ஜன.31: விருதுநகரில் கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மெயின்பஜாரில் மேலரத வீதியை சேர்ந்தவர் ஜெயராஜ்(25). இவர் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி உள்ளார். இது குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பஜார் இன்ஸ்பெக்டர் ப்ரியா சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராஜை கைது செய்துள்ளார்.

Tags :
× RELATED வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்குப்பதிவு