×

குண்டும், குழியுமான கம்பம்மெட்டு சாலை வாகன ஓட்டிகள் அவதி

கம்பம், ஜன. 31: குண்டும், குழியுமாக உள்ள கம்பம்மெட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் கம்பம் மெட்டு உள்ளது. இப்பாதை கேரளாவை இணைக்கிறது. கம்பத்தில் இருந்து கம்பமெட்டு செல்வதற்கு மொத்தம் 13 கி.மீ தொலைவில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 10வது கொண்டை ஊசி வளைவு வரை கடந்த வருடம் புதிதாக தார்ச்சாலை ரூ. 1கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. தற்போது மீதமுள்ள 2 கி.மீ தூரம் உள்ள ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக 17வது கொண்டை ஊசி வளைவு அருகில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை குண்டும், குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கம்பத்தில் இருந்து எளிதாக கேரளாவை இணைக்கும் இந்த சாலையில் இப்போது அதிக அளவில் வாகனங்கள் போக்குவரத்து உள்ளது. குமுளி வழியாக கேரளாவை இணைக்கும் தரைவழிப்பாதைக்கு அடுத்ததாக தற்சமயம் கம்பமெட்டுப்பாதை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கம்பத்தில் இருந்து எளிதாக மூணாறு, இடுக்கி அணை செல்வதற்கு சுற்றுலா பயணிகள் இந்த வழியாகவே பெரிதும் செல்கின்றனர். குறிப்பாக 17 மற்றும் 18வது கொண்டை ஊசி வளைவுகளில் ரோடு மிகவும் சேதம் அடைந்துள்ளதால் வாகனத்தை இயக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகிறோம் எனவே, உடனடியாக மிகவும் சிதிலமடைந்த பகுதிகளில் நெடுஞ்சாலையினர் சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road motorists ,Kumbummetu ,
× RELATED சாத்தூரில் மழையால் சகதிக்காடான தாயில்பட்டி சாலை வாகன ஓட்டிகள் அவதி