×

கம்பம், தேவதானப்பட்டியில் குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மனிதசங்கிலி அனைத்து கட்சிகளும் பங்கேற்பு

கம்பம், ஜன.31: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்கம் சார்பில் கம்பம் நகரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கம்பம் சிக்னலில் இருந்து புதுப்பட்டி வரை நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் முகமது பாபா பக்ருதீன் தலைமை வகித்தார்.  செயலாளர் ஜெயினுலாபுதீன், பொருளாளர் அப்துல்அஜீஸ் மற்றும் ஜமாத் கமிட்டி நிர்வாகிகள், திமுக கம்பம் நகர செயலாளர் துரைநெப்போலியன், மதிமுக நகர செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் ஏரியா தலைவர் நாகராஜ், அமமுக நகர செயலாளர் ராஜமணி, மற்றும் ஆதித்தமிழர் பேரவை, இந்திய தேசிய லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ, பிஎஸ்எப், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும் நிர்வாகிகளும், ஜமாத்தார்,பெண்கள் உட்பட 2000 பேர் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

தேவதானப்பட்டி சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி தேவதானப்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. தேவதானப்பட்டி அரிசிக்கடை பிரிவில் ஜமாத் உலமா சபை சார்பாக இப்போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் சையது இஸ்மாயில் உலவி தலைமை வகித்தார். 300பேர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : parties ,withdrawal ,Human Rights Commission ,Devadanapatti ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...