×

மானாமதுரை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை, ஜன.31: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் இருந்து கன்னார்தெரு செல்லும் வழியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோயில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த வாரம் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கும்பங்களை சிவாச்சாரியர்கள் கோயிலை வலம் வந்து ராஜகோபுரத்திற்கு எடுத்துசென்றனர்.

கோபுர கலசங்களில் சிவாச்சாரியார் ராமமூர்த்தி தலைமையில் குருக்கள் புனித நீரை ஊற்றினர். பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேங்களும், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீப ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் முன்பாக அன்னதானம் நடந்தது. இரவு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் செட்டிகுளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags : Temple ,Manamadurai Ganesha ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு