×

மேலூர் ஒன்றியத்தில் 3 ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு ஒரு இடத்தில் போட்டியின்றி தேர்வு

மேலூர், ஜன. 31: மேலூர் ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சிகளுக்கான துணைத் தலைவர் தேர்தலில் 3 இடங்களில் மீண்டும் ஒத்தி வைக்கப்பட, ஒரு இடத்தில் போட்டியின்றி துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டார். மேலூர் ஒன்றியத்தில் உள்ள தெற்குதெரு, குறிச்சிபட்டி, பூஞ்சுத்தி மற்றும் அரசப்பன்பட்டி ஊராட்சிகளில் துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தெற்குதெரு, பூஞ்சுத்தி மற்றும் அரசப்பன்பட்டியில் நடைபெற இருந்த மறைமுக தேர்தலுக்கு போதிய வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த ஊராட்சிகளில் மறு தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் குறிச்சிபட்டியில் துணை தலைவராக ரேவதி போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Tags : Melur Union ,election ,Vice-President ,Panchayat ,
× RELATED தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு...