×

மேலூர் ஒன்றிய துணை தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

மேலூர், ஜன. 31: மேலூர் ஒன்றிய துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தலைவர் தேர்தலில் விட்டதை துணை தலைவர் தேர்தலில் திமுக கைப்பற்றியது. மேலூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 22 கவுன்சிலர்களில் திமுக 9 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும் வென்றது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 1, அமமுக 3, சுயேட்சை 1 என கவுன்சிலர்கள் வென்றனர். வெற்றிக்கு 12 பேர் தேவை என்னும் நிலையில் திமுகவிற்கு அமமுக ஆதரவளிக்க முன் வந்தது. ஆனால் ஒன்றிய தலைவர் பதவியை அதிமுகவை சேர்ந்த பொன்னுச்சாமி அப்போது வென்றார். அதிமுக வெற்றிக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்து திமுக, அமமுக போராட்டம் நடத்த, துணை தலைவர் தேர்தல் அதனால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணனும், அதிமுக சார்பில் வெங்கடேசனும் போட்டியிட்டனர். இதில் திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் 10 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தலைவர் தேர்தலில் விட்டதை துணை தலைவர் தேர்தலில் திமுக கைப்பற்றியது. துணை தலைவர் பதவியை திமுக வென்றதை அறிந்த திமுக தொண்டர்கள் யூனியன் அலுவலகம் முன்பு வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Tags : DMK ,Vice President ,Melur Union ,
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...