×

தேசிய லங்காடி போட்டி மும்பை செல்லும் நத்தம், திண்டுக்கல் மாணவர்கள்

திண்டுக்கல், ஜன. 31: நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7, 8, 9ம் வகுப்பு மாணவர்கள் சச்சின், கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், யுவராஜ், திண்டுக்கல் எம்எஸ்பி பள்ளி மாணவர்கள் கிசாந்த்குமார், ரிஷபத், ஜெயந்த் ஆகியோர் ஜூனியர் பிரிவிலும், டேனியல், சவுந்திரராஜன்,
ஹரிஹரன், கோபாலகிருஷ்ணன், கலைமுருகேசன், கருப்பசாமி ஆகியோர் சீனியர் பிரிவிலும் மும்பையில் நடைபெறும் இந்திய பாரம்பரிய விளையாட்டான லங்காடி எனப்படுகிற நொண்டியடிக்கும் விளையாட்டு போட்டியில் தேர்ச்சி பெற்றனர்.

இதன்மூலம் அவர்கள் மும்பையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இதற்காக திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தி வரும் சரண் தலைமையில் மாணவர்கள் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்கள்.

Tags : Dindigul ,Mumbai ,National Langley Competition ,
× RELATED திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால்...