×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வீடுகளில் கொசு தொல்லை அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை, ஜன. 31: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அம்பேத்கர் நகர், சிட்ரபாக்கம், ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு, கலைஞர் தெரு, சிவன் கோயில் தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை, கால்வாய் கரை  என 15 வார்டுகளில்  கடைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.இங்கு காவல் நிலையம், தாலுகா அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களும் உள்ளது.   சென்னை-திருப்பதி  சாலையில் உள்ள 10வது வார்டான நேரு பஜார் பகுதியில் மட்டும் மளிகை, காய்கறி, ஜவுளி கடை என 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆயிரக்காணக்கான மக்கள் வந்து செல்வார்கள்.இதனால், நேரு பஜார் பகுதியில் குப்பைகள் அதிகமாக சேறுகிறது, இந்த குப்பைகள் காற்று அடிக்கும்போது அருகில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள பேரூராட்சியின் கழிவு நீர் கால்வாய்க்கு செல்கிறது. இதனால், குப்பை கழிவுகள் அதிகமாக சேர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதேபோன்று ஊத்துக்கோட்டையில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களிலும் குப்பைகள் சேர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது,    
            
இந்நிலையில், கடந்த சில  நாட்களாக  கழிவு நீர் கால்வாய்களால்   அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இந்த கொசுக்கள் இரவு நேரங்களில் படையெடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடிகிறது.  இந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு, மலேரியா, மட்டுமல்லாமல் என்ன காய்ச்சலென்றே தெரியாமல் சிலர் தவிக்கிறார்கள்.  எனவே, கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.      இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கழிவு நீர் கால்வாய் இல்லாத இடமே இல்லை. இந்த கால்வாய்களில் சேரும் குப்பை கழிவுகளால் கொசுக்கள்  உற்பத்தியாகிறது.   கொசுக்களை விரட்ட கொசுவர்த்தி சுருள், லிக்யூடு ஆகியவைகளை பயன்படுத்தினாலும் எந்த பயனும் இல்லை. அப்போது கூட கொசுக்கள் கடிக்கிறது நிம்மதியாக தூங்க முடியவில்லை. அலுவலகங்களில் பகலில் கொசுக்கள் கடிக்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அனைத்து தெருக்களிலிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : houses ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...