×

பொன்னேரி அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் போலி ஆவணம் தயாரித்து ₹80 லட்சம் நிலம் விற்பனை

திருவள்ளூர், ஜன. 31: திருவள்ளூர் அருகே போலி ஆவணங்களை தயாரித்து ₹80 லட்சம் மதிப்பிலான உறவினரின் நிலத்தை கிரையம் செய்து மோசடியில் ஈடுபட்ட வாலிபரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னையை சேர்ந்தவர் லால்சந்த் ஜெயின். இவரது மகன் ரிக்கப்சந்த் ஜெயின் (38) என்பவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் சர்வே எண், 8ல் 1.50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடபட்டாபிராம ராவ் என்பவரிடம் கிரையம் பெற்று இருந்தார். இந்நிலையில் அவரது உறவினரான முருகேசன் மகன் சக்திவேல் (38) என்பவர் போலி ஆவணம் தயாரித்து, ரிக்கப்சந்த் ஜெயின் சொத்தை அபகரித்து கோபி என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ₹80 லட்சம். இதுகுறித்து ரிக்கப்சந்த் ஜெயின் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அரவிந்தனிடம் புகார் கொடுத்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டார்.இதுகுறித்து எஸ்.ஐ வெங்கடேசன், தலைமை காவலர்கள் சூரியகுமார், பிலோமன் ஆகியோர் வழக்கு பதிந்து, அடுத்தவரின் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற சக்திவேலை கைது செய்தனர். பின்னர், திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Borangavoor Village ,Ponneri ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...