×

டிஐஜி தொடங்கி வைத்தார்

வேலூர், ஜன.31: வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு வாகன பேரணியை டிஐஜி காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் ஜேசிஐ சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ைபக் பேரணி நேற்று நடந்தது. டிஐஜி காமினி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக மெகா சைஸ் ஹெல்மெட் வடிவிலான விழிப்புணர்வு வாகனத்தை எஸ்பி பிரவேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதில் ஏடிஎஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, ஜேசிஐ தலைவர் சதீஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணி கிரீன் சர்க்கிளிலிருந்து வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே முடிவடைந்தது.பேரணியின்போது போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் விதிகளை மீறக்கூடாது, வளைவுகளில் முந்தி செல்லக்கூடாது, ஆட்டோவில் அதிகப்படியான பயணிகளை ஏற்றக்கூடாது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, ஹெல்மெட் அணிவதன் அவசியம் ஆகியன குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் வினியோகம் செய்யப்பட்டது. வேலூர் கிரீன் சர்க்கிளில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஐஜி காமினி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் எஸ்பி பிரவேஷ்குமார்.

Tags : DIG ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி