காட்பாடியில் திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர், ஜன.31:காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்தவர், சந்தோஷ் என்கிற ஜின்னு(26), இவர் வீடு புகுந்து திருடுவது உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான போலீசார் சந்தோஷ் என்கிற ஜின்னு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பிரவேஷ்குமார், வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில், சந்தோஷ் என்கிற ஜின்னுவை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories:

>