×

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

சிதம்பரம், ஜன. 31: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாட்சியார் அறக்கட்டளை சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 1999ம் ஆண்டில், தமிழக அரசு சார்பில் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாட்சியார் நினைவாக தலா ரூ. 25 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. அந்த வைப்பு நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையை ஒவ்வொரு துறையிலும் முதல் இரண்டு மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2019-20 நடப்பு கல்வி ஆண்டிற்கான சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் செல்வநாராயணன் பங்கேற்று 102 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. பரிசு தொகையாக மட்டும் மொத்தம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குளோரி, உதவி பதிவாளர் நடராஜன், பிரிவு அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாணவர்களுக்கு பரிசு