×

ராதாபுரம் அருகே வாலிபர் கொலை?

ராதாபுரம், ஜன. 31: ராதாபுரம் அருகே உள்ள பட்டார்குளம் பகுதியில் வாலிபர் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ராதாபுரம் எஸ்ஐ வினுக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சடலமாக கிடந்தவர் கூடங்குளம் குணபாண்டி மகன் கண்ணன் என்பது தெரிய வந்தது. அவர் கார் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் குறித்து தகவல் எதுவும் இல்லை. எனவே கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில்தான் இறந்தாரா? என்பது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Youth murder ,Radapuram ,
× RELATED சென்னை மாங்காட்டில் இளைஞர் வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்