×

ரூ.23 லட்சத்தில் சாலைப்பணி செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பாவூர்சத்திரம், ஜன. 31: சடையப்பபுரத்தில் ரூ.23 லட்சத்தில் சாலைப்பணிகளை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சடையப்பபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் ரூ.10 லட்சத்தில் புதிய சாலை, ஆவுடையானூர் ஊராட்சி கருவேல்நாடார் தெரு, கொண்டலூர் உடையார் தெருவில் ரூ.13 லட்சத்தில் புதிய சாலை  அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அதிமுக செயலாளர் அமல்ராஜ், நிர்வாகிகள் குணம், ரமேஷ், தமிழ் (எ) ராமசாமி அருள்பாண்டி, இருளப்பன், தர்மராஜ், அருள்ராஜ், பொன்னுதுரை, சாமி, ஜெகன், மோகன், அரசன், தங்கசாமி, மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Road Money Selvamomandas Pandian MLA ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி