×

காயல்பட்டினம், செய்துங்கநல்லூரில் மனித சங்கிலி போராட்டம்

ஆறுமுகநேரி, ஜன.31: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. காயல்பட்டினம் காந்தி நினைவு நுழைவு வாயிலிருந்து துவங்கி மெயின் பஜார், கே.டி.எம். தெரு. தாயிம் பள்ளி, கே.எம்.டி. மருத்துவமனை, காயிதமில்த் நகர், ஓடக்கரை வரை நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500 பெண்கள் உட்பட மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தையும், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்ஆர்.பி. சட்டங்களை கண்டித்து கோஷம் எழுப்பினர். சுமார் 3 கி.மீட்டர் தூரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. செய்துங்கநல்லூர்:செய்துங்கநல்லூரில் ஜமாத் இயக்கம் மற்றும் கூட்டமைப்புகள் சார்பாக என்ஆர்சி, சிஏஏ, சிஏஏ மற்றும் என்பிஆரை புறக்கணிக்க கோரியும், பாசிச பாஜ அரசை கண்டித்தும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பேரணி செய்துங்கநல்லூர் பள்ளிவாசலில் மாலை 4 மணிக்கு துவங்கி தெரு, தெருவாக கோரிக்கை கோஷமிட்டு ஊர்வலமாக செய்துங்கநல்லூர் பஜார் அண்ணா சிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள், பெண்களும் பங்கேற்றனர்.பேரணியில் இந்திய தேசம் எங்கள் தேசம், இதில் மத வேற்றுமை என்பது இல்லை, இந்தியர் யாவரும் ஒன்றே, ஒன்றுபட்டு போராடி பாசிச பா.ஜ.க அரசை கண்டிப்போம் என தேசிய கொடியினை ஏந்தியவாறு கோஷமிட்டு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags : Human Chain Struggle ,Kayalpattinam ,Cheyyanganallur ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி...