×

நல்லம்பள்ளி அருகே சிறப்பு கிராம சபா கூட்டம்

நல்லம்பள்ளி, ஜன.31:  காந்தி நினைவு தினத்தையொட்டி, நல்லம்பள்ளி அருகே ஏலகிரியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சியில், காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம், நேற்று மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமை வகித்தார். இதில் தொழுநோய் எதிர்ப்பு தினம் மற்றும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இதில், அலுவலர் நூர்ஜகான், துணைத்தலைவர் தேவசுந்தரி மற்றும் ஊராட்சி செயலாளர் மாது ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், பாகலஅள்ளி ஊராட்சி மன்றத்தில் நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை வகித்தார். தொழுநோய் எதிர்ப்பு தினம் மற்றும் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, உறுதிமொழி ஏற்ற பிறகு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சரவணன் கலந்து கொண்டனர்.

Tags : village council meeting ,Nallampalli ,
× RELATED சிறப்பு கிராம சபை கூட்டம்