×

தர்மபுரி ஒன்றியக்குழு கூட்டம்

தர்மபுரி, ஜன.31: தர்மபுரி ஒன்றியக்குழு கூட்டம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழுக்களுகளின் புதிய உறுப்பினர்களுக்கான முதல் ஒன்றியக்குழு கூட்டம் தர்மபுரி பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம் தலைமை வகித்தார். பிடிஓ ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு, செலவு மற்றும் இருப்பு ஆகியன குறித்து விவாதம் நடந்தது. இதையடுத்து உறுப்பினர்கள் பேசுகையில், ஒன்றிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் செய்யும் போது, சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளித்து தலைவர் செல்வம் மற்றும் பிடிஓ ஆறுமுகம் ஆகியோர் பேசுகையில், தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகளும், அந்தந்த வார்டு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் தான் நடைபெறும் என கூறினர். கூட்டத்தில் துணை தலைவர் ஜெய்சங்கர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri Union Committee Meeting ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்