×

வளர் இளம்பெண்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே உண்ண வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜன.31: திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நெடும்பலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார திட்ட அலுவலர் கண்ணகி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் தங்கராசு முன்னிலை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் சாரதா வரவேற்றார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டு பேசுகையில், வளர் இளம்பெண்கள் தற்காப்பு கலை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை உண்ணுவதன் மூலம் இரும்பு சத்து குறைபாட்டை போக்கி எதிர்கால மாணவ சமுதாயம் ஆரோக்கியமானதாக திகழும். பதப்படுத்தப்பட்ட மாமிசங்களை தவிர்த்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். தன் சுத்தம் மற்றும் கை கழுவுதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து செய்வதால் எந்த நோயும் அண்டாது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அறிந்திருக்க வேண்டும். தினமும் செய்தி தாள்களை வாசிப்பதும், செய்தி சேனல்களை பார்ப்பதும் உலக நடப்புகளை அறிய உதவும் என்றார். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வட்டார மேற்பார்வையாளர்கள் தனலெட்சுமி, நாகலெட்சுமி, ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பாளர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி பணியாளர் இந்திராணி நன்றி கூறினார்.

Tags : Adolescents ,
× RELATED 100 இளம்பெண்களை மயக்கி உல்லாசம் நிர்வாண...