×

திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர், ஜன.31: திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காந்தியடிகளின் 150 ஆவது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. திருவாரூர் விளமலில் இயங்கிவரும் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காந்தியடிகளின் 150 வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் சந்திரா முருகப்பன் தலைமையிலும், முடிகொண்டான் ஒருங்கிணைந்த அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் வெங்கட்சுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிர்வாக மேலாளர் சின்னராஜ் வரவேற்றார்.

இதில் மாநில கருத்தாளர் முத்துக்குமார் பேசுகையில், காந்தியடிகளின் கனவுகளை நினைவாக்க கூடிய வகையில் நாம் இருந்து வருகிறோம். அவரை போன்று உயர்ந்த உள்ளம் மற்றும் அடுத்தவருக்கு உதவக்கூடிய உண்மையான அன்பும் இருந்தால் காந்தியடிகள் போல் நாமும் வாழ முடியும். மேலும் காந்தியின் சுயசரிதை நமது மனம் மகிழும் வகையில் அமைந்துள்ளதால் மாணவர்கள் அவரது வழியை பின்பற்ற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் டிஎஸ்பி (விரல் ரேகை பிரிவு) சரவணன் பேசுகையில், முதன்முதலில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் காந்தியடிகள். அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு படமாக மட்டுமில்லாமல் பாடமாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் அவரது உயர்ந்த நோக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் முருகப்பன், செயலாளர் இன்பராஜ், துணை முதல்வர் மலர்விழி இன்பராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் மாலதி, ரோஸிலூர்துமேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvarur ,Kasturba Gandhi Matriculation School ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்