×

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் 8,187 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

மன்னார்குடி, ஜன.31: மன்னார்குடியில் நடைபெற்ற விழாவில் 50 பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் 2019-20ம் கல்வியாண்டில் 91 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு கல்வி பயிலும் 10,551 மாணவ மாணவியர்களுக்கு ரூ.4.15 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட 50 பள்ளிகளை சார்ந்த 5,275 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற விழாக்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்களுக்கு சப்-கலெக்டர் கமல்கிஷோர் தலைமை வகித்தார்.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மீதிவண்டிகளை வழங்கி அமைச்சர் காமராஜ் பேசுகையில், மாணவ பருவம் என்பது கிடைக்காத பருவம், இப்பருவத்தில் கிடைக்கிற உலக அறிவை அனைத்து மாணவ, மாணவிகளும் பெற வேண்டும் என்பதே ஆசிரியர்கள், பெற்றோர்களின் விருப்பம். மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். உங்களால் முடியும் என்பதை எண்ணி நன்கு படிக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்களின் வாக்கியங்களை மாணவ, மாணவிகள் வாக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்க்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் விவசாய குடும்பம் சார்ந்த மாணவ, மாணவிகள் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 50 பள்ளிகளை சேர்ந்த 8187 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் மனோகரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் தமிழ்ச்செல்வன், தாசில்தார் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானம், கிரிஷ்ணமுர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...