×

வலங்கைமான் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளுக்கு மட்டும் மறைமுக தேர்தல்

வலங்கைமான், ஜன.31: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் கடந்த 11ம் தேதி ஊராட்சி துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறாத 4 ஊராட்சிகளில் நேற்று 3 ஊராட்சிகளில் மட்டும் மறைமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. ஒரு ஊராட்சியில் மட்டும் போதிய உறுப்பினர் வராத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்ட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவ்வூராட்சிகளுக்கு கடந்த 30ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதில் 83 ரெகுநாதபுரம், சித்தன்வாழுர், களத்தூர், முனியூர் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் போதிய உறுப்பினர் வராததால் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. அதனையடுத்து மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்ட்டது. மீதமுள்ள 46 ஊராட்சிகளில் துணைத் தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறாக நான்கு ஊராட்சிகளில் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று அந்தந்த ஊராட்சிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில் 83 ரெகுநாதபுரம் ஊராட்சியில் 1வது வார்டு உறுப்பினர் ஆனந்தராஜ், முனியூர் ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் சரவணன் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். களத்தூர் ஊராட்சியில் மொத்தம் உள்ள 6 வார்டு உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் மட்டுமே மறைமுக தேர்தலில் கலந்து கொண்டனர். இதில் உஷாராணி மற்றும் சாந்தி ஆகியோர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பின்னர் நடைபெற்ற வாக்குபதிவில் உஷாராணி 3 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சித்தன்வாழுர் ஊராட்சியில் மொத்தம் உள்ள 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால் போதிய உறுப்பினர் இல்லை. இதனால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலெட்சுமி தேர்தலை ஒத்திவைத்தார். இதன் மூலம் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற வேண்டிய நான்கு ஊராட்சிகளில் ஒரு ஊராட்சி நீங்கலாக மூன்று ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.உறுப்பினர்கள் வராததால் ஒரு ஊராட்சிக்கு ஒத்திவைப்பு சித்தன்வாழுர் ஊராட்சியில் மொத்தம் உள்ள 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால் போதிய உறுப்பினர் இல்லை. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...