×

பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் குறும்படம் மற்றும் ஆவணப்படம் தயாரித்தல் பயிற்சி பட்டறை

தஞ்சை, ஜன. 31: தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை, சென்னை நிழல் பதியம் சார்பில் “குறும்படம் மற்றும் ஆவணப்படம்” தயாரித்தல் குறித்த ஒரு வார பயிற்சி பட்டறை துவக்க விழா பாரத் கல்லூரி கருத்தரங்க அறையில் நடந்தது. கடந்த 27ம் தேதி நாளை வரை நடைபெறும் பயிற்சி பட்டறையின் துவக்க விழாவுக்கு பாரத் கல்வி குழுமங்களின் செயலாளர் கல்விச்செம்மல் புனிதா கணேசன் தலைமை வகித்து பேசினார்.
காட்சி தொடர்பியல் துறைத்தலைவர் கவிதா வரவேற்றார். பாரத் கல்லூரி இயக்குனர் வீராசாமி, பாரத் கல்லூரி முதல்வர் குமார் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக நிழல் பதிய நிறுவனர்திருநாவுக்கரசர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். துவக்க விழா பேருரையை திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் ஆற்றினார். இதைதொடர்ந்து முதல் நாள் பயிற்சி வகுப்புகள் துவங்கியது. இதில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அமுத சித்ரா தொகுத்து வழங்கினார்.

Tags : Bharat Science College of Science ,
× RELATED பாரத் அறிவியல் நிர்வாகவியல்...