×

கும்பகோணத்தில் தியாகிகள் தினவிழா பேரணி

கும்பகோணம், ஜன. 31: கும்பகோணத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் வாசவி சங்கங்கள் சார்பில் தியாகிகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள், தலைமை வகித்து துவக்கி வைத்தார். வாசவி சங்க தலைவர் நரேன்குமார் வரவேற்றார். நிர்வாகி கொத்தாசுதர்சன் முன்னிலை வகித்தார். அனைத்து வணிகர்களின் சங்க தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். இந்த பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காந்தி பூங்காவை அடைந்தது. முன்னதாக அனைவரும் காந்தியின் உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கும்பகோணத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்கள் பங்கேற்றனர். செயலாளர் அனந்தபிரசாத் நன்றி கூறினார்.

Tags : Martyrs' Day Rally ,Kumbakonam ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...