×

சொக்கநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர், ஜன. 31: கண்டிராதித்தம் சொக்கநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொடடி அனுக்ஞை, கணபதி ஹோமம், சங்கல்பம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு யாகபூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் (மேற்கு) தனசெல்வி, மண்டல இணை ஆணையர் சுதர்சன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Chokkanathaswamy Temple ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...