×

5 நாட்களாக விவசாயிகள் தவிப்பு நாகை மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட 3 பேரிடம் ரூ.70லட்சம் மீட்பு

நாகை, ஜன.31: நாகை மாவட்டத்தில் பணமோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று எஸ்பி செல்வநாகரத்தினம் கூறினார். நாகை மாவட்டத்தில் ஏலச்சீட்டு, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவது போன்ற மோசடிகளில் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க நாகை எஸ்.பி.அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எஸ்.பி.செல்வநாகரத்தினம் கூறியதாவது: வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று ஆசை வார்த்தைகூறும் நிதி நிறுவனங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். கடந்த ஆண்டில் இது போன்று ஆசை வார்த்தைகூறி பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து வந்த 160 மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு ரூ.70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதேபோல் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக 4 மனுவும், பணமோசடியில் ஈடுபட்டதாக 3 மனுவும் வந்துள்ளது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 94981 00905 அல்லது 89396 02100 அல்லது 79977 00100 ஆகிய மொபைல் எண்களிலும் 04365-248119 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Nagpur district ,
× RELATED நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி...