×

அமைச்சர் தகவல் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை எனக் கோரி விரைவில் தமிழகம் முழுவதும் திக சார்பில் போராட்டம்

மயிலாடுதுறை, ஜன.31: மயிலாடுதுறையில் திராவிட கழகம் சார்பாக நீட்தேர்வு எதிர்ப்பு பரப்புரை தமிழகம் முழுவதும் நடத்துகின்றனர். நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை நகராட்சி முன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு நீட்தேர்வினை எதிர்த்து சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட செயலாளர் தளபதிராஜ் வரவேற்று பேசினார். பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார். திராவிடர் கழக பொது செயலர் துரை.சந்திரசேகரன், திமுக வடக்கு மாவட்ட செயலர் நிவேதா முருகன், காங்கிரஸ் கமிட்டி நாகை மாவட்ட செயலர் ராஜகுமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு இடும்பையன், விடுதலைசிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், சிபிஐ (எம்) ஒன்றிய செயலர் மேகநாதன், தமுமுக, மமக மாவட்ட தலைவர் ஷேக்அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திக தலைவர் வீரமணி பேசும்போது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு குலக்கல்வி முறையை திரும்பவும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயப் படுத்தியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வு அறிவித்தபோது தமிழகத்திற்கு தேவையில்லை என்றார். அதனால் ஒரு வருடம் நீட் தேர்வு இல்லாமல் இருந்தது. அவர் மறைவுக்கு பின் நீட்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தமிழகம் முழுவதும் நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவைஇல்லை என போராட்டங்கள் பெருமளவில் நடத்தப்படும். இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

Tags : Minister of Information ,Tamil Nadu ,election ,
× RELATED நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர்...