×

குளித்தலையில் மகாத்மா காந்தி நினைவு நாள் நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குளித்தலை, ஜன. 31: மகாத்மா காந்தி நினைவு தினமான நேற்று தொழுநோய் ஒழிப்பு நாள் மற்றும் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) புகழேந்தி தலைமை வகித்தார். நகராட்சி கணக்கர் உறுதிமொழி வாசித்தார். இந்திய அரசியலமைப்பால் இடைவிடாத உளமார்ந்த பற்று உள்ள இந்திய குடிமகன் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக்கொண்டு எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் வாக்கு செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்தரங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழு பற்றுக்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி கூற அனைத்து நகராட்சி ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mahatma Gandhi Memorial Day ,
× RELATED கண்மாயில் குளித்தவர் மாயம்