×

கரூர் - வெள்ளியணை வரை சாலையோரம் பள்ளங்களால் வாகனஓட்டிகள் கடும் அவதி

கரூர், ஜன. 31: கரூர் வெள்ளியணை வரை சாலையோரம் பள்ளங்களை மறைக்கும் வகையில் மண் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை பகுதி மாவட்ட எல்லையாக உள்ளது. இதில், தாந்தோணிமலை முதல் வெள்ளியணை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த சாலையின் குறிப்பிட்ட து£ரம் வரை சாலையோரம் இரண்டு புறமும் பள்ளம் அதிகளவு உள்ளன. இதனால், இரவு நேரத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பீதியில் சென்று வருகின்றனர். எனவே, பணியாளர்கள் மூலம் சாலையோரம் பள்ளத்தினை மறைக்கும் வகையில் மண்களை கொட்டி மறைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Roads ,road ,Karur - Weliyanai ,
× RELATED மாமல்லபுரத்தில் 8வது நாளாக வெறிச்சோடிய சாலைகள்