×

கள்ளப்பள்ளி ஊராட்சியில் மின்சார பழுது சரிசெய்ய ஊழியர் நியமிக்க வேண்டும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் ஜன. 31: லாலாப்பேட்டை நாகராஜன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ளபள்ளி ஊராட்சியில் மின்தடை ஏற்பட்டால் பழுது சரி செய்ய மின்ஊழியரை நியமிக்க வேண்டும். தற்போதுள்ள ஊழியர் கீழே விழுந்து காலில் பிரச்னை உள்ளதால் ஏற இயலாத நிலையில் உள்ளார். மின்கம்பத்தில் ஏறுபவர்கள் ரூ.100 முதல் ரூ.200 வரை வசூல் செய்து வருகின்றனர். மின்வாரிய ஊழியர் அல்லாதவர்களை கம்பத்தில் ஏற அனுமதிக்கக்கூடாது. பழுதடைந்த மின்கம்பத்தையும் சரிசெய்யவில்லை. 5 மின்கம்பங்கள் மிகவும் பழுதாகி கிடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : collector ,Karur ,
× RELATED கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த...