×

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வீசி செல்லும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

காங்கயம்,ஜன.31:பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையோரத்தில் வீசி சென்ற குப்பைகளால் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. பழனிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக செல்கின்றனர். ஈரோடு, பவானி, சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, ஒசூர் போன்ற பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் காங்கயம் வழியாக சுமார் இதுவரை 30 லட்சம் பேர் வரை சென்றுள்ளனர். தங்களது நேர்த்திகடன் செலுத்த, பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்குகின்றனர். பக்தர்கள் சாலையோரத்தில் ஆங்காங்கு அமர்ந்து உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இதில் பாக்கு தட்டு, பிளாஸ்க் பாட்டில், டீ கப், பாலீத்தின் பைகள் போன்றவற்றை குப்பை தொட்டிகள் ஏதும் வைக்கப்படாததால் அப்படியே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்தது.

காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் நத்தக்கடையூர், வீரணம்பாளையம், பாப்பினி ஊராட்சி பகுதி சாலையோரத்தில் குப்பைகள் அகற்றாமல் உள்ளனர். இதனால் சாலையோரத்தில் உள்ள குப்பையால் துர்நாற்றம் வருகிறது. பாலித்தீன் குப்பைகள் காற்றில் பறந்து மேய்ச்சல் காடுகளுக்கு செல்கிறது, ஆடு, மாடுகள் இவற்றை உண்டு நோய்வர வாய்ப்பாக உள்ளது. இதனால் உடனடியாக சாலையோரத்தில் உள்ள குப்பைகளை உடனயாக அகற்றி சுகாதாரம் காக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pilgrims ,
× RELATED 120 டிகிரி வெயில் கொளுத்துகிறது ஹஜ் யாத்திரையில் 1301 பேர் பலி