×

பைக்கில் இருந்து தவறி விழுந்து எல்க்ட்ரீசியன் பலி

காங்கயம்,ஜன.31:ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (36). எல்க்ட்ரீசியன். இவர் நேற்று திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். காங்கயம் அருகே சென்னிமலை ரோட்டில் வடுகபாளையம் பிரிவு அருகே காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் காங்கயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அப்போது சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக  நிலை தடுமாறி கீழே ரோட்டில் விழுந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Electrician ,
× RELATED கோவையில் மின்சாரம் தாக்கி 2 சிறார்கள்...