×

சைனிக் பள்ளியில் 6, 9-ம் வகுப்புகளில் சேர நுழைவு தேர்வு முடிவு வெளியீடு

உடுமலை,ஜன.31:உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2020-21ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் சேர்வதற்கு கடந்த 5-ம் தேதி நுழைவு தேர்வு நடந்தது. இதில் 6-ம் வகுப்பில் சேர்வதற்கு 1662 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர்வதற்கு 799 மாணவர்களும் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரம் பள்ளியின் இணைய தளமான www. inikschoolamaravathinagar.edu.in ல் நேற்று (31-ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதை பார்த்து தெரிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று பள்ளி முதல்வர் ஏர் கமாண்டர் சிதானா தெரிவித்தார்

Tags : Sainik School ,
× RELATED கடற்படை புதிய தளபதியாக தினேஷ் குமார் பதவியேற்பு