×

உறைபனியில் தேயிலை தோட்டங்கள் கருகின

ஊட்டி,ஜன.31: ஊட்டி அருகேயுள்ள ஏமரால்டு, லாரன்ஸ், புத அட்டுபாயில் மற்றும் காந்திகண்டி போன்ற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் உறை பனியில் கருகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி காணப்படும். இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்கள் மற்றும் வனங்களும் பாதிக்கும். குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் கடுமையாக பாதிக்கும். நீரோடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களே பனியில் கருகிவிடும். மீண்டும் ஜூன் மாதம் வரை இந்த தேயிலை ேதாட்டங்களில் பசுந்தேயிலை பார்க்க முடியாது. அதன் பின்னரே தேயிலை செடிகளில் பசுமை திரும்பும்.

குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள இத்தலர், எமரால்டு, லாரன்ஸ், புது அட்டுபாயில், நுந்தளா போன்ற பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் பாதிக்கும். இம்முறை மிகவும் தாமதமாக உறைபனி விழுந்தது. இம்மாதம் துவக்கம் முதலே பனிப்பொழிவு காணப்பட்டது. துவக்கத்தில் சில நாட்கள் கடும் உறைபனி காணப்பட்டது. இப்பகுதிகளில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, லாரன்ஸ், எமரால்டு, புதுஅட்டுபாயில் மற்றும் காந்திக்கண்டி போன்ற பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்கள் உறைபனியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tea gardens ,
× RELATED வால்பாறை தேயிலைத் தோட்டங்களில்...