×

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு கணவர், மாமியார், சகோதரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

பாலக்காடு, ஜன.31: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒலவக் கோட்டைச் சேர்ந்த சசிகுமார் மகள் சரண்யா (25). இவரது கணவர் பரளியை சேர்ந்த சுரேஷ் (40). திருமணத்துக்கு பின்னர் சுரேசும், அவரது தாயார் கார்த்தியாயணி (61), சகோதரி சுனிதா (41) ஆகியோர் சரண்யாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட சரண்யா கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம்தேதி வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பரளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார் சுரேஷ், கார்த்தியாயணி, சுனிதா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது சரண்யாவை தற்ெகாலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பாலக்காடு மாவட்ட செஷன்ஸ் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சரண்யாவின் கணவர் சுரேஷ், மாமியார் கார்த்தியாயணி, கணவரின் சகோதரி சுனிதா ஆகியோருக்கு  தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் ேமலும் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags : mother-in-law ,sister ,jail ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!