×

வால்பாறையில் பூங்கா பணி மந்தம்

வால்பாறை, ஜன.31: வால்பாறையில் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பணி துவங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகிறது. வால்பாறைபகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் பல வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், பூங்கா அமைக்க வால்பாறை நகரை ஒட்டியுள்ள, காமராஜ் நகர் எதிரே உள்ள பிஏபி காலனியில்,  பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 4 ஏக்கா் காலி இடம் தோ்வு செய்யப்பட்டு நகராட்சி மூலம் பணி மேற்கொள்ள முடிவு செய்து நிதியும் ஒதுக்கப்பட்டது. இதனிடையே தற்போது பூங்கா அமைய உள்ள இடத்தை சமன்படுத்தும் பணி துவங்கி நடைபெற்றது வருகிறது.

இந்நிலையில் நிதி பற்றாக்குறை நிலவதாலும், பார்கிங் அமைக்க, சாலை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட இட பிரச்னைகள் குறித்து பொதுப்பணித்துறைக்கும், ஒப்பந்தாரருக்கும் பிரச்னைகள் உள்ளதாலும், உரிய ஆணை வெளியிடாத காரணத்தாலும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு, மந்த நிலையில் பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்து உள்ளது. இந்நிலையில் அமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

Tags : Park work slowdown ,Valparai ,
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது