×

மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்

பொள்ளாச்சி, ஜன. 31:  பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நேற்று, மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு, வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன்  முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள், ‘தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டோம். அரசியலமைப்பின் அடிப்படை கருத்துக்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது கடமையாகும் என்பதை உணர்வோம்’ இவ்வாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதுபோல் சப்-கலெக்டர் அலுவலகத்தில்,  மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, சப்-கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. தாசில்தார் தணிகைவேல் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய்துறையினர் திரளாக கலந்து கொண்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துகொண்டனர்.

Tags : Mahatma Gandhi ,anniversary ,
× RELATED ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில்...