×

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது

கோவை, ஜன.31:
 ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதை பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி வின்சென்ட் தலைமையில், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசாருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவை ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு பையுடன் நின்றிருந்த ஒருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த இளையராஜா(55) என்பதும், ஆந்திரா சென்று கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இளையராஜாவை போலீசார் கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Andhra Pradesh ,
× RELATED திட்டமிட்டு தாக்குதல் நடப்பதாக...