×

ஆம்பூர் டவுன் போலீசார் சார்பில் காவலன் செயலி விளக்க கூட்டம்

ஆம்பூர், ஜன.23: ஆம்பூர் நகர போலீஸ் சார்பாக ஆம்பூரில் பல்வேறு இடங்களில் காவலன் செயலி விளக்கக் கூட்டம் நடந்தது. ஆம்பூர் நகரில் உள்ள பல்வேறு வார்டுகளில் காவலன் செயலி விளக்கக்கூட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் சார்பாக நேற்று முன்தினம் நடந்தது. ஆம்பூர் சாமியார் மடம், சாய்பாபா கோயில் தெரு ஆகிய இடங்களில் நடந்த விளக்க கூட்டத்திற்கு ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தனிப்பிரிவு போலீஸ் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆம்பூர் டவுன் எஸ்ஐ பிரவீன்குமார் காவலன் செயலி பற்றி விளக்கினார். கிராம விழிப்புணர்வு குழு பொதுமக்கள் பங்களிப்போடு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் கராத்தே மணி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ambur Town Police Dept ,meeting ,
× RELATED ஊத்துக்கோட்டையில் போலீசார் ஆலோசனை கூட்டம்