×

கலசபாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் திடீர் ஆய்வு

கலசபாக்கம், ஜன.30: கலசபாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார். கலசபாக்கம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி நேற்று கலசபாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பிடிஓ அலுவலக கட்டிடம், கலசபாக்கம் ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் திட்ட இயக்குனர் ஜெயசுதா, பிடிஓக்கள் மரியதேவ் ஆனந்த், அன்பழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Rural Development ,
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்