×

வேட்டவலம் அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை

வேட்டவலம், ஜன. 30: வேட்டவலம் அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு ேபாட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2 நாள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 27ம் தேதி நடந்தது.

இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு விளையாட்டு கலந்து கொண்டனர். இதில் வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். இதில் இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாணவர்கள் கோகுல், யுவன்சங்கர் ஆகியோர் 2ம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மாணவன் ரகு முதலிடமும் பெற்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாஜலம் உடற் கல்வி இயக்குநர் சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் கோபிநாத், கிருஷ்ணவேணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Vattavalam ,Government School Students ,District Level Sports Competitions ,
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு