×

காட்பாடியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தில் ஜெர்மன் நாட்டு குழுவினர் பார்வை

வேலூர், ஜன.30: காட்பாடியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தை ஜெர்மன் நாட்டை சேர்ந்த குழுவினர் நேற்று பார்வையிட்டனர். வேலூர் மாநகராட்சியில் குப்பைகளை எருவாக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுவீடாக மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து பெற்று திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகளை உரமாக தயாரிக்கும் பணி நடக்கிறது.

இதனை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் விற்கப்படுகிறது. சிறப்பான முறையில் நடந்து வரும் இப்பணியை அண்டை மாநிலங்களை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் அவ்வப்போது பார்வையிட்டு தங்கள் மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அந்தமான் தீவை சேர்ந்த குழுவினர் இதை பார்வையிட்டனர்.

நேற்று ெஜர்மனி நாட்டை சேர்ந்த குழுவினர் வேலூர் வந்தனர். அவர்கள் காட்பாடி காந்தி நகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பார்வையிட்டனர். எவ்வாறு குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது? அவற்றில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி? அதனை செயல்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

மேலும் பொதுமக்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்து பெறுவது? அதனை கையாளும் முறை என்ன? என்பது குறித்தும் மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டறிந்தனர். இதேபோல் அங்கு பணியாற்றும் தூய்மைப்பணி ஊழியர்களிடம், இப்பணியை மேற்கொள்வதற்காக மாநகராட்சி வழங்கும் ஊதியம், வேலை நேரம் ஆகியவை குறித்தும் கேட்டனர். இதேபோல் காட்பாடி மதி நகரில் உள்ள குப்பை கிடங்குக்கு சென்று ஜெர்மனி நாட்டுக்குழுவினர் பார்வையிட்டனர்.

Tags : nationals ,German ,Katpadi ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி