×

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.30: ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதுக்கோட்டை கிளைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். புதுக்கோட்டை மக்கள் பயன் பெறும் வகையில் ஷேர் ஆட்டோ வசதி செய்து தரவேண்டும். மாவட்ட மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை பெறும் வகையில் தனியாக இட வசதி செய்து தரவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன. கூட்டத்தில் மாவட்ட தலைவர் திருமேனிநாதன், மாவட்ட செயலாளர் சிதம்பரம், மாநில இணை செயலாளர் பிச்சையப்பா, மாநிலப்பிரச்சார செயலாளர் அய்யணபிள்ளை, மாவட்ட பொருளாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags : Retired Officers Association Meeting ,Pudukkottai ,
× RELATED புதுக்கோட்டையில் அரசின் காப்பீடு...