×

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 36 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கந்தர்வகோட்டை, ஜன.30: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சி மன்றங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அhpயாணிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராசாத்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றியக்குழு தலைவர் ரெத்தினவேல் கலந்து கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ் மற்றும் குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுதா, ஊராட்சி செயலர் அறிவழகன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையில் மாரியம்மன் கோவிலில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேஷ், ஊராட்சி செயலர் ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தாசில்தார் சதீஷ் கலந்து கொண்டார். துணை தாசில்தார்கள் செல்வகணபதி, செந்தில், ஊராட்சி மன்ற துணை தலைவர் அருண்பிரசாத், ஊராட்சி செயலர் ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.வௌ்ளாளவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை தலைவர் சரண்யா, ஊராட்சி செயலர் சத்தியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் 36 ஊராட்சி மன்றங்களில் தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

Tags : meeting ,Sabha ,Kandarwagotte Union ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு