×

எம்பி திருநாவுக்கரசர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கள்ளச்சாராயத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி,ஜன.30: பொன்னமராவதியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட கலால் உதவி ஆணையர் மனோகரன் தலைமையில் காந்திசிலையில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதியாக சென்று வந்தனர்.  கள்ளச்சாராயத்தில் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் அட்டை ஏந்தி ஊர்வலத்தில் சென்றனர். இதில் பொன்னமராவதி துணை தாசில்தார் வெள்ளைச்சாமி, தேர்தல் துணை தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் ஜோதி, விஏஓ ரமேஷ் மற்றும் எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தாலுகா அலுவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் இடத்தில் மரத்தை வெட்டி உயர்கோபுர மின் விளக்கு அமைக்க அனுமதி பொன்னமராவதி,ஜன.30: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டியில் தனி நபர்களின் இடத்தில் இருந்த மரத்தை வெட்டி ஒரு தனிநபருக்காக உயர் மின் கோபுர விளக்கு அமைத்த பேரூராட்சி செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து வலையபட்டியை சேர்ந்த ராமநாதன், குமரப்பன், வள்ளியப்பன் ஆகியோர் பொன்னமராவதி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வலையபட்டியில் எங்களுக்கு சொந்தமான க.சா.அ.லெட்சுமி விநாயகர் கோயில் ஊரணிக்கரையில் இருந்த பச்சை புளிய மரத்தை அத்துமீறி வெட்டிவிட்டு அந்த இடத்தின் அருகில் உயர் மின் விளக்கு போடுவதற்கு பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் எந்த வித அனுமதியும் பெறாமல் அரசு தரப்பில் இருந்து எந்தவித டெண்டரும் பெறாமல், ஒரு தனிநபரை திருப்தி படுத்துவதற்காக ஏற்பாடு செய்கிறார். நேரில் போய் தாவா சொன்னதற்கு சரியாக பதில் கூறவில்லை. இந்த பிரச்னைக்குறிய இடத்தில் இருந்த பாலம் மரம் வெட்டியற்கு கோர்ட்டு மூலம் 1959ல் மரம் வெட்டியவர் மரத்திற்கு உண்டான தொகையினை கொடுக்க தீர்ப்பாகியுள்ளது. எனவே எங்களது இடத்தில் இருந்த மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நிறைந்த இடத்தில் போட வேண்டிய உயர் மின் கோபுர விளக்கை பயன்பாடிற்கு கொண்டுவராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Awareness rally ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி