×

சந்தேகத்திற்கு இடமான குளிர்பானம் விற்பனை

புதுக்கோட்டை, ஜன.30: புதுக்கோட்டை மன்னர் கல்லூரி எதிரில் கல்லூரி மாணவர்களுக்கு வாகனத்தில் புரூட் பீர், புரூட் விஸ்கி என்ற பெயரில் குளிர்பானங்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு குளிர்பானம் விற்கப்படும் இடத்திற்கு நேடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வாகனம் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமலும், வாகனத்திற்கு உரிமம் இல்லாமலும் இன்சூரன்ஸ் இல்லாமலும் இருந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு சந்தேகத்திற்கு இடமாக குளிர்பானம் விற்றதால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து அதில் இருந்த புரூட் பீர் என்ற குளிர் பானத்தின் மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவரும் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் புதிதாகவோ அல்லது சந்தேகத்திற்கு உரிய உணவு பொருட்கள் விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்தார்.

Tags :
× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...