×

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

பெரம்பலூர், ஜன.30: பெரம்பலூரில் வருவாய் மாவட்ட அளவிலான சமக்ரா சிக்சா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெரம்பலூர்மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர் வருவாய் மாவட்ட அளவிலான சமக்ரா சிக்சா விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. போ ட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் தொடங்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாரிமீனாள், குழந்தைராஜன், ஆர்எம் எஸ்ஏ மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ராஜா, விளையா ட்டு அலுவலர் பாபு, உடற்க ல்வி ஆய்வாளர் ராஜேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தடகள விளையாட் டுப் போட்டிகளான ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டு தல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எரிதல், ஈட்டி எரிதல் ஆகிய விளை யாட்டுப்போட்டிகள் மட்டும் அரசு மற்றும் ஆதிதிராவி டர் நலப் பள்ளிகளில் உள் ள 9,10 வகுப்புகளைச் சேர் ந்த 17வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கும், 11,12 வகுப்புகளைச் சேர்ந் த 19வயதிற்கு உட்பட்ட மா ணவ, மாணவியருக்கும் என தனித்தனியாக போட் டிகள் நடத்தப்பட்டன.
இதில் வருவாய் மாவட்ட அளவில் மொத்தம் 250 மாணவ, மா ணவியர் கலந்து கொண்டனர்.

பல்வேறு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளுக்கு நடு வர்களாகப் பணிபுரிந்து வெற்றிபெற்ற மாணவ மாணவியரை தேர்வு செய்தனர். மாலையில் நடந்த பரி சளிப்பு விழாவில் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் கலந்துகொண்டு சான்றிதழ்களையும், பதக்கங்க ளையும் வழங்கிப் பாராட்டி னார்.

Tags : District level sports competition ,school children ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி...