×

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்.2 முதல் வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம்

கரூர், ஜன.30: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ம்தேதி முதல் 8ம்தேதிவரை வீடுவீடாக கையெழுத்து இயக்கம் கரூர் மாவட்டத்தில் நடத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் கரூர் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில்நேற்று நடைபெற்றது.  மாவட்ட பொறுப்பாளர், எம்எல்ஏ செந்தில்பாலாஜி, தலைமை வகித்தார். நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணி செயலாளர் சின்னசாமி, சட்டத்துறை இணை செயலாளர் மணிராஜ், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி, மார்க்சியகம்யூ மாவட்ட செயலாளர் கந்தசாமி, இந்தியகம்யூ மாவட்டசெயலாளர் ரத்தினம், மதிமுக பொதுக்குழுஉறுப்பினர் தங்கவேல், கொங்குநாடுமக்கள்தேசிய கட்சி மூர்த்தி, விசிக ஜெயராமன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்& அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய குடிமக்கள்பதிவேடு தயாரிக்கும் எந்த முயற்சியையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கீழகண்ட இடங்களில் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி2ம் தேதி (ஞாயிறு) காலை 10மணிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது. பள்ளபட்டி-மாவட்டபொறுப்பாளர்செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி உயர்நிலைசெயல் திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, சின்னதாராபுரம் மணிராஜ், க.பரமத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கந்தசாமி, தென்னிலை மீனாட்சி ரமேஷ்(கொமதேக), வேலயுதம்பாளையம் ரத்தினம்(இந்திய கம்யூ), வாங்கல் ஜெயராமன்(விசிக), வெங்கமேடு நன்னியூர் ராஜேந்திரன், கரூர் நகரம் ஜோதிமணி எம்பி, தாந்தோணி சின்னசாமி, வெள்ளியணை கபினிசிதம்பரம், உப்பிடமங்கலம் மூர்த்தி, புலியூர் விசா சண்முகம், கிருஷ்ணராயபுரம் பரணிமணி, தரகம்பட்டி சின்னசாமி, லாலாப்பேட்டை பழனிவேல், தோகமலை ராமர் எம்எல்ஏ, குளித்தலை தேவேந்திரன்,, மருதூர் முரளி, நங்கவரம் பல்லவி ராஜா, அய்யர்மலை சதீஸ், 8ம்தேதி வரை தொடர்ந்து வீடுவீடாக நேடியாக சென்று கையெழுத்துபெறும் இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags : House of Representatives ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...