×

கல்லிடைக்குறிச்சி ஒர்க்ஷாப்பில் தீ விபத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

அம்பை, ஜன. 30:  கல்லிடைக்குறிச்சி ஒர்க்ஷாப்பில் நேற்று காலையில் நடந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. அம்பை - கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் பள்ளி அருகே ஆட்டோ ஒர்க்ஷாப் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான வாகனங்கள் சர்வீசுக்கு விடப்பட்டிருந்தன. நேற்று காலையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை உருவானது. ஒர்க்ஷாப் உரிமையாளர் அம்பை ஊர்க்காட்டைச் சேர்ந்த ராஜா(42) சம்பவ இடம் வந்து தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார்.

மேலும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். அம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பைக்குகள், கம்ப்ரஷர் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalidaikurichi ,
× RELATED கல்லிடைக்குறிச்சி அருகே ஸ்கூட்டி மீது டெம்போ மோதி 3 பெண்கள் படுகாயம்