×

காரையாறில் பழங்குடியின மக்களுக்கான அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு முகாம்

வி.கே.புரம், ஜன.30:  காரையாறு சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் மத்திய  அரசு சார்பாக பழங்குடியின மக்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த  விழிப்புணர்வு முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம் தலைமை வகித்து மத்திய, மாநில அரசுகள் காணியின பழங்குடி மக்களுக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பழங்குயின மக்கள் அடையாள அட்டை பெற்றால் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, முதியோர் பென்சன், தொழில் தொடங்க 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் கிடைக்கும் என தெரிவித்தார்.

முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம், தமிழ்நாடு          கிராம வங்கி மண்டல மேலாளர் வரதராஜபெருமாள், நபார்டு வங்கி  மாவட்ட வளர்ச்சி மேலாளர் சலீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலர் போஸ்வெல்ஆசீர் வரவேற்றார். இதில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்படி இலவச எரிவாயு இணைப்பு வழங்க கோரி 60 பேர் சொர்ணா இண்டேன் கேஸ் உரிமையாளர் முருகேசனிடம் மனு அளித்தனர். இவர்களுக்கு 10 நாளுக்குள் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் பாபநாசம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயராஜ், தமிழ்நாடு கிராம வங்கி நிதி சார்  ஆலோசகர் மகாலிங்கம்,  சொர்ணா இண்டேன் கேஸ் உரிமையாளர் முருகேசன், வனச்சரகர் பாரத், வனவர் மோகன், காணியின பழங்குடியின சங்க செயலாளர் கணேச மூர்த்தி, தலைவர் ஆறுமுகம் உட்பட ஏராளமான        காணியின மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Government Welfare Awareness Camp ,
× RELATED பிறந்தநாள்... இன்று பிறந்தநாள் மக்களை...