புளியங்குடி அருகே திருவேட்ட அய்யனார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

புளியங்குடி, ஜன.30:  புளியங்குடி அருகே உள்ள திருவேட்ட அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. புளியங்குடியை அடுத்துள்ள திருவேட்டநல்லூரில் உள்ள பூர்ண புஷ்கலா சமேத திருவேட்ட அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை யாகசாலை, மங்கள இசையுடன் பூஜைகள் ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து இன்று காலை 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் சிறப்பு தீபாராதனை, மகா நெய்வேத்யம், ஆசீர்வாதம், ஆஜாரியன் மரியாதை, எஜமான் மரியாதை, பொதுமக்கள் தரிசனம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், திருவேட்டநல்லூர் யாதவர் சமுதாய விழா கமிட்டியினரும் செய்துள்ளனர்.

Related Stories:

>